Published on 22/01/2025 | Edited on 22/01/2025
நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் ரஜினி முதல் பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர். இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வருகிற 24ஆம் தேதி வெளியாகிறது.