இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற சாவர்க்கரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. 'ஸ்வதந்த்ரா வீர் சாவர்கார்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்தீப் ஹூடா நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனந்த் பண்டிட் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதில் நடிகரான ரன்தீப் ஹூடாவே இப்படத்தை இயக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ரன்தீப் ஹூடா. அப்போது இப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் காந்தி இறந்த நாளான இன்று 'ஸ்வதந்த்ரா வீர் சாவர்கார்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி இந்தி மற்றும் மராத்தியில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோவை ரன்தீப் ஹூடா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Two heroes of Indian Independence Struggle; One celebrated and One removed from History
On #MartyrsDay 2024 - HISTORY WILL BE REWRITTEN #SwatantryaVeerSavarkar IN CINEMAS ON 22nd March, 2024#VeerSavarkarOn22ndMarch#WhoKilledHisStory@RandeepHooda #AnkitaLokhande… pic.twitter.com/Lv2tWlzfvz— Randeep Hooda (@RandeepHooda) January 30, 2024