Skip to main content

கமல்ஹாசனின் புதிய படம்; வெளியான அடுத்த அப்டேட் 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Sushin Shyam joins kamalhaasan next movie

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை  பெற்ற படம் விக்ரம். இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார் படமாக உருவாக்கவுள்ளது. இதனால் படக்குழு கமலுக்கு இணையாக நடிக்கும் நடிகர்களைத் தீவிரமாகத் தேடி வந்ததாகவும் இறுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தேர்வு செய்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கும்பலங்கி நைட்ஸ், வைரஸ், ட்ரான்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்