Skip to main content

நான் யாருக்கு செய்றேன்னு சொல்லமாட்டேன், ஆனா செய்வேன் - சிவகார்த்திகேயன்  

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
siva

 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ட்விட்டரில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். 

 

 

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. 'அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா' என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு ஒதுக்கி உதவி செய்ய இருக்கிறேன். நான் யாருக்கு என்ன செய்யப்போகிறேன் என்று நிச்சயமாக சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படம் எப்படி பல புதுமுக கலைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல் எங்கேயோ எதோ ஒரு மூலையில் இருக்கும் நலிந்த விவசாயின் வாழ்க்கையை கண்டிப்பாக நான் செய்யப்போகும் உதவி மாற்றும். இதை நான் சொல்லாமல் செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தில் இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட்டு இதை இங்கு பதிவு செய்யாமல் போனால் தப்பு என்று தோன்றியது. நாம் மட்டும் இந்த வெற்றியை கொண்டாடினால் நன்றாக இருக்காது. இது விவசாயிகளுக்கும் போய் சேர வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்