பாலிவுட்டின் டாப் நடிகரான ஷாருக்கான் தனது 59வது பிறந்தநாளை கடந்த 2ஆம் தேதி கொண்டாடினார். ஆண்டுதோறும் மும்பையில் உள்ள தனது வீட்டில், பால்கனியில் இருந்து வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களை சந்தித்து நன்றி கூறுவார். ஆனால் இந்த வருடம் அதை தவிர்த்து விட்டு, அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஷாருக்கான் தான் சிகரெட் பழக்கத்தை கைவிட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஒரு நல்ல விஷயம் சொல்கிறேன். நான் இனிமேல் சிகரெட் பிடிக்க போவதில்லை. புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன். ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் அதுவும் சரியாகி விடும்” என்றார்.
முன்னதாக ஒரு பேட்டியில் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாக கூறியிருந்தார். மேலும் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, பொது வெளியில் சிகரெட் பிடித்திருந்தார். அது சர்ச்சையாகி நீதிமன்றம் வரை சென்றது. அதற்காக ரூ.100 அபராதம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.