Skip to main content

மேடையில் கலைஞர்...பேனருக்குப் பின்னாடி நாங்கள்...சத்யராஜ் சொன்ன கலகல நினைவு!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
sathyaraj

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த கனா திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். நடிகர் சத்யராஜ் பேசியபோது, சிரிப்பு சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. மேலும் அவர் ஹீரோவாக இருந்த காலத்தில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளை பற்றி பகிர்ந்துகொண்டார். 


“எனக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது கவுண்டமணி அண்ணனின் அட்ராசக்க! அட்ராசக்க! காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ எனும் பாடலை பாட தோணுகிறது. அந்த காலத்தில் நானும் மணிவண்ணன், கவுண்டமணி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை போன்று இது இருக்கிறது. இங்கு இருக்கும் கலகலப்பை விட அது அதிகமாகவே இருக்கும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு இளமை வயது என்பதால் கொஞ்சம் கூடுதல் உற்சாகமாகவே இருப்போம். நாங்கள் யாரும் மேடைகளில் இருக்கவே மாட்டோம், மேடைக்கு பின் இருக்கும் பேனர் பின்னாடி இருப்போம்.

 

 

எனக்கு தொடர்ந்து பல நூறு நாட்கள் ஓடிய படம், 1987ல் ஒரே நாளில் பாலைவன ரோஜாக்கள்,விடிஞ்சா கல்யாணம் ரெண்டும் ரிலீஸ். ஒரே ஹீரோ, ஒரே இயக்குனர். பாலைவன ரோஜாக்கள் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலைஞர் தலைமையில் விழா நடந்தது. எங்க டீமை, கொஞ்சம் டீஸன்டா இருந்தீங்கன்னா நல்லா இருக்கும், தயவு செய்து பேனர் பின்னால் போகாதீர்கள், முன்னாடி வந்து அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அடுத்து ஜல்லிக்கட்டு பட நூறாவது நாள் விழாவுக்கு அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் எங்களிடம் வந்து, எம்ஜிஆர் வரார்பா கொஞ்சம் அமைதியா இருங்க என்று எங்களிடம் கெஞ்சி அமைதியாக இருக்க வைத்தார். ஆனால், இங்கு பேனருக்கு பின்னால் போகாமலே கலகலவென இருக்கிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்