தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தொடக்கத்தில் தன் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்த இவர். தற்போது பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 70 படங்களை இயக்கியுள்ளார். இவரது பங்களிப்பை பாராட்டி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர் மனைவி ஷோபா, பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எஸ்.பி முத்து ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் , பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.
இதனிடையே , “நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம். ஆனால் மனிதனாக வாழ்ந்து கொண்டிருகிறேன். மனிதம் ஒன்று தான் மதம். மதம் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கு. கிறிஸ்தவருக்கு பைபில், இந்துக்களுக்கு கீதை, முஸ்லீம்களுக்கு குரான். அதிலிருக்கிற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். இயேசு, நபிகள் நாயகம் எல்லாம் அவதாரங்கள். கடவுளின் செய்தியைக் கொண்டு வந்த இறை தூதர்கள். அவர்கள் சொன்ன மெசேஜ்களை பின்பற்றுங்கள். மெசெஞ்சரில் சொல்வதை அல்ல. இயேசு ஒரு மெசெஞ்சர். அவர் சொன்ன மெசேஜை பின்பற்றுகிறேன். அவரை அல்ல” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.