Skip to main content

ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ விவகாரம் - சிக்கிய நபர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
rashmika mandana deep fake video issue Creator Arrested In Delhi

கடந்த நவம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்குப் பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஷ்மிகாவும் மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்திருந்தார். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதமே பீகாரை சேர்ந்த 19 வயதுள்ள ஒரு இளைஞரை சந்தேகித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டவரை கைது செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்