Skip to main content

‘இரண்டு வீடு இருக்கவங்க ஒரு வீட்டை கொடுக்கணும்’- பார்த்திபன் ஐடியா!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

r parthiban

 

 

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (24/03/2020) உயிரிழப்பு சுமார் 16 ஆயிரம் அளவில் இருந்த நிலையில் ஒரே நாளில் உலகளவில் சுமார் 2,000 பேர் இறந்தனர். 

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மலமலவென உயர்ந்து நான்கு லட்சத்தை எட்டியுள்ளது. கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒருவர் கரோனா வைரஸின் தாக்கத்தால் இறந்துள்ளார். அதேபோல பலரும் கரோனா வைரஸ் பரவலால் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், "இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதைப் பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்க வேண்டும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கரோனாவைக் குணப்படுத்தும் மருத்துவமனையாகக் கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார். அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்