Skip to main content

'777 சார்லி' படத்தைப் பார்த்துக் கண் கலங்கிய முதல்வர்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

karnataka cm basavaraj bommai crying after watching 777 charlie film

 

கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி இயக்குநர் கிரண் ராஜ் இயக்கத்தில்  '777 சார்லி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். ஒரு நாயிக்கும் உறவுகளற்ற இளைஞனுக்கும் இருக்கும் உறவைப் பறைசாற்றும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாகப் படத்தை திரை பிரபலங்கள், திரைத்துறை விமர்சகர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதுள்ளார். திரையரங்கில் 777 சார்லி படத்தைப் பார்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த வருடம் தன்னுடைய செல்ல பிராணி நாய் இறந்ததை நினைத்துக் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்