Skip to main content

மீண்டும் பாலிவுட்; வெப் சீரிஸில் அறிமுகமாகும் ஜோதிகா

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

jyotika hindi web series update

 

திரைத்துறையில் 50 படங்களில் நடித்துள்ள ஜோதிகா, தமிழில் அதிகப் படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் குறைந்த படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் தனது 50வது படமான 'உடன் பிறப்பே' படத்தை தொடர்ந்து மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'காதல்' படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இந்தியில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் 'ஸ்ரீ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இந்தியில் உருவாகும் ஒரு கதையில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதை வெப் சீரிஸாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தொடருக்கு ‘தாபா கார்டல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, நடிகர் கஜ்ராஜ் ராவ் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

சோனாலி போஸ் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து குடும்பப் பெண்களை மையமாக வைத்து இந்த தொடரின் கதை அமைந்துள்ளதாகவும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி  தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் பேசப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் ஜோதிகா. 

 

 

சார்ந்த செய்திகள்