![dil raju speak about ajith](http://image.nakkheeran.in/cdn/farfuture/9JZejPzTPR1g65sZijT-GuuTYPsppaK_TqlkuwM-h_I/1673247385/sites/default/files/inline-images/28_32.jpg)
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கில் 'வாரிசு' படம் 14ஆம் தேதி வெளியிடவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஜய் சார் வாரிசு பட தெலுங்கு ப்ரோமோஷனுக்கு ஹைதராபாத்திற்கு வரவுள்ளார். அவர் என்னிடம் ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
மேலும் "நான் கதையைத்தான் நம்புகிறேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்களுக்குப் பொருத்தமான கதை கிடைத்தால் கண்டிப்பாக அவர்களுடன் எதிர்காலத்தில் சேர்ந்து படம் பண்ணுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.