Skip to main content

“எவர்கிரீன் கான்செப்ட்டை கையாண்டு இருக்கிறோம்” - இயக்குநர் காந்தி கிருஷ்ணா

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
break fast movie update

‘நிலாகாலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்ததாண்டவம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா ‘பிரேக் பாஸ்ட்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர் ரங்கநாதன் ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். 

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்க, படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் முதன் முறையாக தயாரித்திருக்கிறது. 

இப்படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாவது, “காதலர்களிடையே அன்பு மற்றும் சண்டை என்ற எவர்கிரீன் கான்செப்ட்தான் இந்தப் படத்திலும் கையாண்டு இருக்கிறோம். இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடையே மிகவும் பொதுவான விஷயமாக பிரேக்-அப் மாறிவிட்டது.  காதலில் வரும் பிரச்சினைகளை அவர்கள் சகித்துக் கொள்ளாமலும், ஒருவருக்கொருவரின் வலியை உணராமலும் இருப்பதுதான் படத்தின் கரு. இது ஒரு மியூசிக்கல் லவ் படம்” என்றார். 

சார்ந்த செய்திகள்