Skip to main content

"அவை அனைத்தும் ஆதாரமற்றவை, போலியானவை" - தயாரிப்பாளர் போனி கபூர் திடீர் அறிவிப்பு

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

boney kapoor not acquired the remake rights of Love Today

 

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டு தமிழகத்தில் மட்டும் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'லவ் டுடே' படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிப்பதாகவும் டேவிட் தவான் அதனை இயக்கவுள்ளதாகவும் போனி கபூர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் இத்தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

போனி கபூர், அஜித்தின் 'துணிவு' படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

சிம்பு குறித்து உலா வந்த தகவலுக்கு முற்றுப்புளி வைத்த பிரபலம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
ashwath marimuthu clarifies to simbu fans

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர். 

ashwath marimuthu clarifies to simbu fans

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார்.