Skip to main content

புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துவதில் பெருமை - பாபி சிம்ஹா

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

bobby simha  shared about Vasantha Mullai movie experience

 

வெற்றி தோல்வியை தாண்டி திரில்லர், ஆக்சன், காமெடி என்று அனைத்து வகையான படங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. செய்வதை நாம் சரியாகச் செய்ய வேண்டும். வெற்றியும் தோல்வியும் மக்கள் கையில் என நக்கீரன் ஸ்டூடியோவிற்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார் பாபி சிம்ஹா. சமீபத்தில் இவர் நடித்த வசந்தமுல்லை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை இவரது மனைவி ரேஷ்மி தயாரித்திருக்கிறார். 

 

பாபி சிம்ஹா பேசியதாவது, “இந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக வருவார். அவரைப் போன்றவர்களால் வசந்தமுல்லை மாதிரியான கதையை யோசிக்க முடியும். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். அவருடைய குறும்படம் பார்த்து தான் அவரைத் தேர்வு செய்தேன். அவரை அறிமுகப்படுத்தியதில் எனக்குப் பெருமை. அவர் போலவே அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர்.

 

மேலும், கதை விவாதம் முதற்கொண்டு நாயகி காஷ்மிராவை பங்கேற்க வைத்தோம். இரண்டாம் பாதியில் வசனம் குறைவு. எக்ஸ்பிரஷன்கள் மூலம் கதையை நகர்த்த வேண்டும் எனும்போது அதை மிகச் சிறப்பாக செய்தார். பிரேமம் புகழ் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனுக்கு கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அதனால் அவரை இசையமைப்பாளராக்கினோம்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

Next Story

பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் விவகாரம் - நீதிமன்றம் உத்தரவு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
prakash raj bobby simha land issue case

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்புநிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றி விட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில், பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளை பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்” என குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.