Skip to main content

வங்கி கொள்ளையன் என்ற சந்தேகத்தின் பேரில் பிரபல இயக்குநர் கைது 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Black Panther director ryan coogler mistaken bank robber

 

இயக்குநர் ரியான் கூக்லர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  'பிளாக் பாந்தர்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது. இதனை தொடர்ந்து ’பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. 

 

இந்நிலையில் இயக்குநர் ரியான் கூக்லர் வங்கி கொள்ளையன் என நினைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அட்லாண்ட பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கியிற்கு தலையில் தொப்பி, முகக்கவசம், கண்ணாடி அணிந்து சென்ற இயக்குநர் ரியான் கூக்லர் பணம் எடுக்கும் காசோலை உடன் "என்னுடைய வங்கி கணக்கில் 12 ஆயிரம் டாலர் பணம் எடுக்க வேண்டும். தயவு செய்து அதை வேறு இடத்தில் வைத்து எண்ணி கொடுங்கள். நான் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறேன்" எனக் ஒரு காகிதத்தில் எழுதி வங்கி காசாளரிடம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து கொள்ளை முயற்சி என சந்தேகமடைந்த காசாளர் வங்கி மேலதிகாரியிடம் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து வங்கி மேலதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இயக்குநர் ரியான் கூக்லரை கைது செய்தனர். அதன் பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் இயக்குநர் எனத்  தெரிய வரவே ரியான் கூக்லரை காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இந்த செய்து தற்போது பலரையும் அதிச்சியடைய வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்