Skip to main content

தோனி இதுவரை வெளியே உட்கார்ந்தது இல்லை. ஏன்..? - பரத் விளக்கம்  

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
bharath

 

ஐ.பி.எல் போன்று பேட்மிண்டன் விளையாட்டிற்கும் டி.என்.பி.எஸ்.எல் என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு பேட்மின்டன் சூப்பர் லீக் போட்டி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் திருப்பூர் வாரியார் அணியை அந்த அணியின் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் பரத் அறிமுகப்படுத்திவிட்டு பேட்மிண்டன் குறித்தும், கிரிக்கெட் வீரர் டோனி குறித்தும் பேசும்போது.... 

 

 

"எனக்கு சிறு வயது முதலே கால்பந்தாட்ட வீரராக வேண்டும் என்று ஆசை. ஆனால் என் கேரியர் 16 வயதிலேயே பாய்ஸ் படம் மூலம் சினிமாவிற்கு மாறிவிட்டது. இருந்தும் நான் எதோ வழியில் இன்னமும் விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு தான் இருக்கிறேன். நான் முறைப்படி கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன் கற்றுக்கொண்டுள்ளேன். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் இன்னமும் நான் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கிறேன். அது எனக்கு ஃபேவரிட் கேமாக மாறிவிட்டது. முன்பு இருந்ததை விட இப்போதெல்லாம் நிறைய பேர் பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். பிட்னஸ் என்பது விளையாட்டிற்கு மிகவும் முக்கியம். நான் தோனியுடைய தீவிர ரசிகன். இதுநாள் வரை காயம் காரணமாக தோனி டீமில் இருந்து வெளியே உட்கார்ந்தது இல்லை. அந்த அளவு தன் உடம்பை மிகவும் பிட்னஸ்ஸாக வைத்துள்ளார். ஒரு விளையாட்டு வீரர் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் அருமையாக காட்டியுள்ளார். அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்