Skip to main content

மீண்டும் தொடங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

rajini

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக கடந்த டிசம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படாமலேயே உள்ளது.

 

ad

 

‘அண்ணாத்த’ ஷூட்டிங் மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் கடந்த மாதம் வெளியான நிலையில், அத்தகவல் தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மார்ச் 15-ஆம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

 

ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளை சென்னையிலேயே அரங்குகள் அமைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்