தமிழ்ப்படம் 2-ன் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடன் என்ன கேள்விகள் கேட்கலாம் என ஃபேஸ்புக் வாயிலாக கேட்டிருந்தோம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சி.எஸ்.அமுதனின் பதில்கள்...
ஸ்ரீரெட்டி பற்றி ஏன் படத்தில் சொல்லவில்லை?
ஹா..ஹா..ஹா.. நீங்கள் சொல்றவங்க எல்லாத்தையுமா படத்துல சேர்க்கமுடியும்? என்கிட்ட கண்டெண்ட் 10.30 மணிநேரத்திற்கு இருக்கு. ஆனால் ஒரு படத்திற்கான அதிகபட்ச நேரம் என்பது இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம்தான். அதனால் தேர்ந்தெடுத்துதான பண்ணமுடியும்.
மேக் இன் இந்தியா பற்றி ஒரு படம் எடுப்பீர்களா?
கண்டிப்பாக பண்ணலாம்.
தமிழ்நாட்டில் நடந்த விஷயங்களை படத்தில் காண்பித்தீர்கள், அப்படியே எதிர்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதையும் கூறியிருக்கலாமே?
அது என் வேலை இல்லையே... சொல்லவேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் படத்தின் களம் அது இல்லையே... ஸ்பூஃப் என்ற களத்தில் ஓரளவிற்குதான் கருத்து சொல்ல முடியும். படத்தில் எவ்வளவு சொல்ல முடிந்ததோ அவ்வளவு சொல்லியிருக்கிறோம்.
கருத்தை மட்டும் கூறும் படங்கள் உங்களுக்கு விருப்பமா?
கருத்தை மட்டும் கூறினால் அந்தப்படம் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே விருப்பமிருக்காது. 'அது எங்களுக்குத் தெரியும், நீங்க அதை சொல்லாதீங்க' என்று சொல்லிவிடுவார்கள். படத்தில் ஓரளவிற்கு கருத்து கூறலாம். கருத்து மட்டுமே படமாக இருந்தால், எனக்குத் தெரிந்து யாரும் விரும்பமாட்டார்கள். இது என்னுடைய கருத்து.
தமிழ்ப்படம் 3-ல் இன்னும் அனைவரையும் கலாயுங்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள்...
கண்டிப்பா... செஞ்சுடலாம்!!!
தமிழ் ராக்கர்ஸ்க்கு உங்கள் படத்தைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் அவுங்களுக்கு என்ன சொல்ல முடியும்? அவுங்கதான் எனக்கு எதாவது சொல்லணும், நல்ல பிரிண்ட் எதும் வச்சுருக்காங்களா... என்ன, எப்படினு...
நீங்க அட்லிக்கே டஃப் கொடுக்குறீங்களே சார்?
எந்த விதத்துல... (தெரியாதது போல சிரிக்கிறார்)
தமிழ்ப்படம் 3 எப்போ எடுப்பீங்க?
இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுக்குக் கிடையாது.
ஒரு படத்தை கேலி செய்வதால் அவர்கள் அறிவாளி என்று அர்த்தமில்லை. அது பலரின் உழைப்பு. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
இதை சொல்றவங்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படிப்பட்டவங்கதான் இப்படி சொல்வார்கள். ஸ்பூஃப் என்பதும் ஒரு திரைப்பட வகை. அதை செய்யவும் உழைப்பு தேவை, சும்மால்லாம் எடுத்துற முடியாது.
உங்களுடைய இரண்டாவது படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள்?
ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் எனக்குக் கூறியிருக்கிறார்கள். பார்ப்போம்...
படத்தில் திமுகவை விட அதிமுகவை அதிகமாக கலாய்த்திருக்கிறீர்கள்?
ஓ.கே. இதற்கு வேறென்ன சொல்வது?
தமிழ் சினிமாவிலிருப்பவர்கள் நீங்கள் கொடுத்த பதிலடியில் திருந்திவிடுவார்களா?
திருத்துவது நம்ம வேலை இல்லை. எல்லாரையும் ஜாலியாக சிரிக்க வைப்பதுதான் நம்ம வேலை.
நீங்க எப்போ இங்கிலிஷ் படம் எடுப்பீர்கள்?
என்னோட தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு சொல்றேன்.
நீங்க திண்டுக்கல் ஐ.லியோனியோட மருமகன். அதனால்தான் திமுகவை அதிகம் கலாய்க்கவில்லை என்கிறார்களே?
பெர்சனல் விஷயங்களைப் பற்றி கேட்க வேண்டாம், ப்ளீஸ். (உறுதியாக மறுத்துவிட்டார்)