Skip to main content

மஞ்சு வாரியரிடம் இழப்பீடு கேட்டு நடிகை நோட்டிஸ்

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
Actress Sheetal Thamby demands Rs 5 crore in compensation from Manju Warrier

அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை மஞ்சு வாரியர், அடுத்ததாக அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனின் விடுதலை 2, ரஜினியின் வேட்டையன், ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இதனிடையே மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபுட்டேஜ் படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இருப்பினும் பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப் இப்படத்தைப் பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை சீத்தல் தம்பி மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “ஃபுட்டேஜ் படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது. 

அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்குப் பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்