Published on 06/02/2020 | Edited on 06/02/2020
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்ற போது, அவரது செருப்பு மாட்டிக்கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை 'டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா' என கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான்'. சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சரின் இந்த செயலால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் வைரலாகும் அந்த வீடியோவை பார்த்த நடிகர் பிரசன்னா, “இது மிகவும் அருவெறுக்கத்தக்க செயல்” என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.