Skip to main content

64-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு... முழு விவரம்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

dhanush

 

திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா நெருக்கடி நிலை காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

 

விருதுகள் விவரம் பின்வருமாறு...

 

சிறந்த தமிழ்ப்படம் - அசுரன்

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்), மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குநர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - இந்தி)

சிறந்த படம் - மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர் (கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

சிறந்த பாடகர் - பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகி - சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு நடுவர் பிரிவு - ஒத்த செருப்பு (தமிழ்)

சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த அறிமுக இயக்குநர் - மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி (தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ், இந்தி)

சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (கோலாம்பி, மலையாளம்)

சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)
 

 

சார்ந்த செய்திகள்