Published on 12/12/2022 | Edited on 12/12/2022





தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து பெற ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு இன்று வந்திருந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரஜினி வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இல்லாததால், அவரது சார்பாக இன்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
கொட்டும் மழையிலும் ரசிகர்கள், அவர்களின் குழந்தைகள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.