Skip to main content

காதலியின் படுக்கையில் வேறு ஆண்; காதலன் செய்த சம்பவம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 55

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
Thilagavathi ips rtd thadayam 55

மும்பையில் புகழ்பெற்ற நீரஜ் மரியா வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

தொலைக்காட்சி நிர்வாகி நீரஜ் மாயமானதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், மரியா வீட்டில் ஏழாம் தேதி காலையில் ஒரு இளைஞர் வந்ததாகவும், அதன் பிறகு அவர்கள் இருவரும் காரில் ஒரு கனமான பெட்டியுடன் வெளியே சென்றதாகவும் அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் போலீசாரிடம் கூறியதையடுத்து, மரியாவிடம் விசாரணை நடத்தினர். மரியா சென்ற கார் யாருடையது என்று கேட்க, அதற்கு எமிலியுடைய நண்பரது கார் என்று மரியா கூறினார். இதனையடுத்து, அந்த நண்பரிடம் போலீசார் கேட்ட போது தன்னுடைய காரை மரியா வாங்கவில்லை என்று கூறியதில் மரியா கூறியது பொய் என்று உறுதிசெய்யப்பட்டது. இதோடு முந்தைய தொடரில் உள்ள விவரங்களை பார்த்தோம். மீதமுள்ளவை பின்வருமாறு...

போலீசார் மீண்டும் விசாரித்ததில் அந்த கார் தனது நடனக் கலைஞருடைய உதவியாளருடையது என்று மரியா சொல்கிறாள். அடுத்ததாக நீரஜ் போனை நண்பரிடம் கொடுத்ததாக சொல்லப்பட்டதால் அதை வாங்கி ஆய்வு செய்யும் போது ஏழாம் தேதியில் ஒரு 11:30 மணி வாக்கில் ஒரு முறை ஆன் ஆகி யாரோ பேசியிருக்கின்றனர் என்பதை கண்டுபிடித்து, அந்த கால் வந்த இடம் மும்பையிலிருந்து ஒரு ஒன்றரை மணி நேரம் தள்ளி ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பதை கண்டுபிடிக்கின்றனர். 

மரியாவுடைய டெபிட் கார்டு வாங்கி பார்க்கின்றனர். அதில் ஹைபர் சிட்டி சூப்பர் மார்க்கெட்டில் சந்தேகம்படும்படி ரூம்சென்ட் , பிளாஸ்டிக் பைகள், ஒரு சூட்கேஸ், ஒரு வெட்டுக்கத்தி, என்று வாங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேகம் உறுதியாக முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் எமிலை கொச்சினில் இருந்து வரவழைத்து மல்லாட் போலீஸ் நிலையத்தில் மேலும் விசாரிக்கின்றனர். அவன் எட்டாம் தேதி மும்பையில் தன்னுடைய கடற்படை பயிற்சிக்காக வந்துவிட்டதாக சொல்கிறான். ஆனால், அவனுடைய போனின் லொகேஷன் பார்த்தபோது, அது மரியா இருக்கும் அபார்ட்மெண்ட்டை தான் காட்டியது. மேற்கொண்டு மரியாவிடம் கிடுக்குபிடி விசாரித்ததில் கடைசியாக நடந்த உண்மையை வாக்குமூலம் கொடுக்கிறாள். 

அதில், நீரஜ் என்பவர் அன்றிரவு தன் கூடவே தங்கி இருந்தார். அந்த சமயம் எமில் போன் செய்த போது நீரஜ் இருப்பதை அறிந்து கொண்டு அவனை அங்கிருந்து வெளியே செல்லுமாறு சொன்னார். சொல்கிறேன் என்று போனை மரியா வைத்து விடுகிறார். ஆனால், நீரஜ் போகவில்லை அங்கே தான் இருந்தார். சிறிது நேரம் கழித்து நீரஜ் போனிலிருந்து மீண்டும் எமில் போன் செய்து கண்டித்து பேசினார். அதன் பிறகு நான் தூங்கிவிட்டேன். காலையில் ஏழு மணி அளவில் எமில் வீட்டிற்கு வந்து முரட்டுத்தனமாக என்னை நகர்த்தி விட்டு நேராக உள்ளே வந்து படுக்கையில் நீரஜ் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவனுடன் வாக்குவாதம் ஆகி கிச்சனிலிருந்து கத்தியை எடுத்து வந்து நீரஜ்ஜை  குத்தி கொலை செய்து விட்டார். தன்னையும் கொடூரமாக தாக்கி, நீரஜ் பிணத்திற்கு அருகே பாலியல் உறவு வைத்துக்கொண்டார். மேலும், அவர் ஒரு லிஸ்ட் கொடுத்து சில பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வருமாறு அனுப்பி, வாங்கிக் கொண்டு கொடுத்ததும் நீரஜ்ஜின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் போட்டு நாங்கள் போட்டிருந்த ரத்தக்கரையான உடைகளையும் அந்த பைக்குள் போட்டு கார் வரவழைத்து ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வெளியே ஒரு கிராமத்தில் உடலோடு எங்கள் துணியையும் சேர்த்து போட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டோம். அப்போது போய்க்கொண்டிருந்த போதுதான் ஒரு தடவை பாக்கெட்டில் வைத்திருந்த நீரஜ் போன் ஆன் ஆகி அவரது நண்பர் தொடர்பு கொண்டு நீரஜ் எங்கே என்று கேட்டார். ஆனால் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டு நான் போனை வைத்து விட்டேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறாள். 

பிறகு எமில் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு 17ஆம் தேதி அவரை கைது செய்து வந்து விசாரித்து அவனுடைய வாக்குமூலத்தை மெஜிஸ்ட்ரேட் முன்னால் வாங்கி நடந்த சம்பவத்தை பதிவு செய்கின்றனர். வழக்கு 48 சாட்சியங்களை வைத்து மூன்று வருடம் நடக்கிறது. உடலை எரித்ததாக சொன்ன இடத்தில் போய் சென்ற போது ஒரு நான்கைந்து எலும்புகள் மட்டுமே கிடைக்கிறது. வழக்கு முடிந்ததும் செஷன் கோர்ட்டில் மரியாவை பொருத்த அளவில் அவள் எதுவும் செய்ய முடியாத ஒரு கையாளாகாத நிலையில் இருந்திருக்கிறார். எனவே அவள் மீது தடயங்களை மறைத்த தவறு மட்டுமே இருப்பதால் அவளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 அபராதமும் நீதிபதியால் கொடுக்கப்படுகிறது. மேலும், தனது காதலியின் படுக்கையில் வேறு ஒரு ஆளை பார்த்ததால் வந்த கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்ய செய்த கொலை.  எனவே எமில் செய்தது குற்றமற்ற கொலையாக இருப்பதாக விசித்திரமாக தீர்ப்பளிக்கிறார். எனவே அவருக்கு மரண தண்டனை கொடுக்காமல் பத்தாண்டுகள் மட்டுமே சிறை அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு மூன்று வருடம் நடந்ததால் அந்த மூன்று வருட காலமும் இருவரும் சிறையில் இருக்க மரியா தீர்ப்புக்கு  பின்னர் விடுதலை ஆகிறார். மேலும் எமில் என்பவர், மீதமுள்ள 7 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருக்கிறார். இந்த தீர்ப்பின் மீது திருப்தி இல்லாமல் நீரஜ் பெற்றோர், மரியாவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடியும் ஒன்றும் பயனளிக்கவில்லை. விடுதலையான மரியா, தனக்கும் எமிலுக்கும் இனிமேல் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கிறார். அதுமட்டுமல்லாமல், மரியா பல்வேறு குற்றச்செயல்களிலும், மோசடி செயல்களிலும் ஈடுபட்டு, அதுதொடர்பான வழக்குகளில் சிக்கி இருக்கிறார்.