சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும். தோனிக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அதிக வாய்ப்பளிக்க இருப்பதாகவும் பிசிசிஐ நினைப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
38 வயதாகும் தோனி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வை அறிவிப்பார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை தோனி எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் இந்த வருட இறுதியில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ அவரை டீமில் சேர்க்காமல் புறக்கணிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸுடனான ஆட்டத்திற்கு இந்திய அணியின் டீம் குறித்து தகவல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதை வைத்துதான் தோனிக்கு இந்திய அணியில் இடம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள சேவாக், “தோனியிடம் நிலைமையை கூறுவது தேர்வுக்குழுவின் கடமை. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஒரு பேட்ஸ்மேனாக இனி தொடர முடியாது. இந்த விஷயத்தை தேர்வுக்குழு, டோனியிடன் நிச்சயம் எடுத்துக் கூற வேண்டும். அதன்பிறகு ஓய்வு குறித்து அவரே முடிவெடுத்துக் கொள்வார்.