Skip to main content

6 பந்துகளில் 5 விக்கெட்... தெறிக்கவிட்ட இந்திய வீரர்!

Published on 30/11/2019 | Edited on 01/12/2019

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா - கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைக் குவித்தது. ஹரியானா அணி 19வது ஓவர் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கடைசி ஓவர் பந்து வீசிய அபிமன்யு மிதுன் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளையும், 6-வது பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அதற்கு முன்னரே 3 ஓவர்கள் பந்து வீசிய அபிமன்யு விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில் கடைசியாக ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



அதுமட்டுமின்றி ராஞ்சி கோப்பை, சையது முஸ்தாக் அலி, விஜய் ஹாசரே என 3 உள்ளூர் தொடர்களிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.