
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
துபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக சஹா 87, வார்னர் 66, மணீஷ் பாண்டே 44 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவரில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3, நடராஜன், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அபுதாபியில் இன்று (28/10/2020) நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.