Skip to main content

200+ வீரர்கள், 50 கோடிகள்... ஐபிஎல் போலவே அசத்திய கபடி ஏலம்...

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்த படியாக ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டாக கபடி இருந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் தொடரை 435 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டாக உள்ளது ப்ரோ கபடி லீக். 
 

pro kabbadi

 

 

ப்ரோ கபடி 7-வது சீசன் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும்  வெளிநாட்டு வீரர்கள் உட்பட 200+ வீரர்களை12 அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்தனர். அதிகபட்சமாக மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் 1.45 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
 

“நான் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவன்.என் தந்தை ஒரு விவசாயி. என்னுடைய சூழ்நிலையில் இருந்து வந்து ஒரு கபடி வீரராக ஆவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்திருந்தேன். என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய 100% ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என சித்தார்த் தேசாய் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் கோடி கணக்கில் வீரர்களை ஏலத்தில் எடுத்தது இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ரோ கபடி லீக் தொடரில் ஒரு சில குறிப்பிட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு புனேரி பல்தான்ஸ் அணி நிடின் தோமரை 1.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த ஆண்டு அதே அணி அவரை 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் 1 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே வீரர் இவர் மட்டுமே.
 

கடந்த ஆண்டு அதிகபட்ச விலைக்கு (1.51 கோடி) வாங்கப்பட்ட மோனு கோயட்டை, இந்த ஆண்டு 93 லட்சத்திற்கு யூ பி யோதாஸ் அணி வாங்கியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த முகமது எஸ்மெயில் நபிபக் 77.75 லட்சத்திற்கு பெங்கால் வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். வழக்கம் போலவே வெளிநாட்டு வீரர்களில் ஈரான் அணி வீரர்களே ஏலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.
 

தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மன்ஜீத் சில்லர், விக்டர் ஒபிரோ ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆண்டுக்கான தமிழ் தலைவாஸ் அணிக்கு ரைடர்கள் ராகுல்சவுத்ரி, சபீர் பாபு, ஆனந்த், யஷ்வந்த் பிஷ்னோய், அஜித் குமார் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. ஆல்ரவுண்டர்கள் ரான் சிங், வினீத் சர்மா ஆகியோரையும் டிபெண்டர்கள் மொஹித் சில்லர், அஜீத், அபிஷேக், மிலாத் ஷேய்பக், பார்த்திபன், ஹிமன்சு, ஹெமன்ட் சாஹன் ஆகியோரையும் ஏலத்தில் வாங்கியது.
 

கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணிக்கு ரைடிங்கில் அஜய் தாகூர் தவிர வேறு எந்த வீரரும் பங்களிக்காததால் சென்ற வருடம் பலவீனமான ரைடிங் யூனிட்டாக இருந்தது தமிழ் தலைவாஸ் அணியின் ரைடிங். ப்ரோ கபடி வரலாற்றின் நம்பர் 1 ரைடர் ராகுல் சவுத்ரிஇந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்திருப்பது இந்திய அணியின் கேப்டன் அஜய் தாகூர்க்குபலத்தை கூட்டும்.
 

pro kabbadi

 

 

டாப் 5 இந்திய வீரர்கள்:
சித்தார்த் தேசாய் (1.45 கோடி- தெலுங்கு  டைட்டன்ஸ்)
நிடின் தோமர் (1.20 கோடி- புனேரி பல்தான்ஸ்)
ராகுல் சவுத்ரி (94  லட்சம்- தமிழ் தலைவாஸ்)
மோனு கோயட் (93 லட்சம்- யூ பி யோதாஸ்)
சந்தீப் நர்வால் (89 லட்சம்- யு மும்பா)
 

டாப் 5 வெளிநாட்டு வீரர்கள்:
முகம்மது எஸ்மெயில் நபிபக் - ஈரான் (77.75 லட்சம்- பெங்கால்வாரியர்ஸ்)
அபோசர் மோகஜர்மயானி - ஈரான் (75 லட்சம்- தெலுங்கு  டைட்டன்ஸ்)
ஜங் குன் லீ - கொரியா(40 லட்சம் -பாட்னா பைரேட்ஸ்)
முகம்மது எஸ்மெயில் மாக்சுது - ஈரான் (35லட்சம் - பாட்னா பைரேட்ஸ்)
டாங் ஜியோன் லீ– கொரியா (25 லட்சம் - யு மும்பா)

டாப் 5 ரைடர்கள்:

சித்தார்த் தேசாய் (1.45 கோடி - தெலுங்கு  டைட்டன்ஸ்)
நிடின் தோமர் (1.20 கோடி - புனேரி பல்தான்ஸ்)
ராகுல் சவுத்ரி (94லட்சம் - தமிழ் தலைவாஸ்)
மோனு கோயட் (93 லட்சம் - யூ பி யோதாஸ்)
பிரசாந்த் கே. ராய் (77 லட்சம் -ஹரியானா ஸ்டீலர்ஸ்)
 

டாப் 5 டிபெண்டர்கள்:

மகேந்தர் சிங் (80 லட்சம் - பெங்களூரு புல்ஸ்)
சுரேந்தர் நாடா (77 லட்சம் - பாட்னா பைரேட்ஸ்)
பரேஷ் பன்ஷ்வால் (75 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)
ரவீந்தர் பஹால் (61 லட்சம்- தபாங் டில்லி)
விஷால் பரத்வாஜ் (60 லட்சம் - தெலுங்கு டைட்டன்ஸ்)
 

டாப் 5 ஆல்ரவுண்டர்கள்:

சந்தீப் நர்வால் (89 லட்சம் - யு மும்பா)
ரான் சிங் (55 லட்சம் - தமிழ் தலைவாஸ்)
விஜய் (41 லட்சம் - தபாங் டில்லி)
வினோத் குமார் (26 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)
ரோஹித் குலியா (25 லட்சம் - குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ்)