Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

indian wrestlers

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

 

இந்தநிலையில், இன்று (04.08.2021) நடைபெற்ற மகளிர் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில், இந்தியாவின் அன்ஷு மாலிக் பெலாரஸின் இரினா குராச்ச்கினாவிடம் தோல்வியடைந்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஷிவ்பால் சிங், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறினார். அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

 

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் (86 கிலோ) மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் தீபக் புனியா சீனாவின் லின் சூசனை வீழ்த்தி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் (57 கிலோ) இந்தியாவின் ரவிக்குமார் தஹியா, பல்கேரியாவின் ஜார்ஜி வங்கேலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.