Skip to main content

இன்னும் கோலி கேப்டனாக இருப்பது அவரின் அதிர்ஷ்டம்...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

தோனி, ரோஹித் சர்மா ஆகியோருடன் ஒப்பிடுகையில் கோலி கேப்டன்ஷிப்பில் இன்னும் வெகு தூரம் கடக்க வேண்டியுள்ளது. தோனி, சர்மா ஆகியோர் 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக உள்ள கோலி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இருந்தாலும் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியிலிருந்து விலக்காமல் வைத்துள்ளது. இதற்காக கோலி பெங்களூர் அணி நிர்வாகத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கம்பீர் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சித்துள்ளார். 

 

csk

 

ஐ.பி.எல். தொடரில் தோனிக்கு அடுத்தபடியாக கேப்டன்ஷிப்பில் சிறந்து விளங்கியவர்கள் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா. கம்பீர் தலைமையில் இரண்டு முறை கொல்கத்தா அணி கோப்பையை வென்றுள்ளது. கேப்டன்ஷிப்பில் வீரர்களை பயன்படுத்தும் முறையில் கோலி சரியாக செயல்படாமல் இருந்து வருகிறார். டி வில்லியர்ஸ், கெயில், வாட்சன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் ஒருமுறைகூட கோலி தலைமையில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லவில்லை. 
 

கோலி பெங்களூர் அணியை வழிநடத்துவதற்கு முன்பு 5 தொடர்களில் 3 முறை ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதில் 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் கடந்த 6 ஆண்டுகள் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் கோலி. இதில் இரண்டு முறை மட்டுமே ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒருமுறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியடைந்துள்ளது. கோலி தலைமையில் ஆர்.சி.பி.அணி 96 போட்டிகளில் 44 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் கோலியின் கேப்டன்ஷிப் மீதான விமர்சனம் அதிகமாக உள்ளது. 

 

virat

 

உலகக்கோப்பை தொடரில் நான்காவது வரிசை வீரராக ராயுடு ஒருவழியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா  தொடரில் சொதப்பியதால் அந்த இடத்தில் யாரை களமிறக்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது இந்திய அணி நிர்வாகம். இந்த நிலையில் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர். 
 

தோனி, தவான் ஆகியோர் ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாதபோது ஃபார்முக்கு வரும் வரை அவரை அணியில் விளையாட வைத்தனர். ஆனால் ராயுடு கடந்த ஒரு தொடரில் மட்டுமே சொதப்பியதால் அவருக்கு அடுத்த வாய்ப்பு தராமல் பாரபட்சம் காட்டுகிறது அணி நிர்வாகம். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வரை சிறப்பாக விளையாடி வந்தார் ராயுடு. ராயுடுவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்ற வீரர்களுக்கு ஏன் எடுக்கப்படவில்லை என்றும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பாரபட்சம் காட்டுவதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

virat

 

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி தான். மீதிதான் கோலி. தோனி தான் அணியை வழிநடத்தி, கிட்டத்தட்ட இந்திய அணியின் பாதி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி சமீபத்தில் கூறியிருந்தார்.
 

தோனி விளையாடும் போட்டிகளில் கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை தோனியிடம் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைனில் பீல்டிங் நிற்கிறார் கோலி. தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்பதால், அவர் எதிரணியின் வியூகங்களை எளிதாக புரிந்து கொள்கிறார். தோனி இருப்பதால் கோலிக்கு பெரிய நெருக்கடி இல்லை. கோலிக்கும் தோனிக்கும் இடையிலான புரிந்துணர்வு, சரியான முடிவை எடுக்க உதவுகிறது என்று கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.