மார்ச் மாதம் நடைபெற இருந்த 13-ஆவது ஐபிஎல் தொடரானது கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பு குறைவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு, அது குறித்தான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 56 போட்டிகள் லீக் போட்டிகள், 4 போட்டிகள் ஃபிளேஆப் சுற்று போட்டிகள் ஆகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 60 போட்டிகளில், மொத்தம் 1582 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன. அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் டெல்லி அணி வீரர் ஷிகர் தவான் 67 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விளாசப்பட்டுள்ள மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 734 ஆகும். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மும்பை அணி வீரர் இஷான் கிஷான் 30 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட சதங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆகும். அரை சதங்களின் எண்ணிக்கை 110 ஆகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் வீழ்த்தப்பட்டுள்ள மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 668 ஆகும். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டெல்லி அணி வீரர் ரபாடா 30 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்ட மொத்த ரன்கள் 19,352 ஆகும். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் 670 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.