Skip to main content

பாராஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்த அவனி லெகாரா!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

 

avnani lekhara

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

 

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை  என்ற மகத்தான சாதனையையும் அவனி லெகாரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்கிடையே ஸ்வரூப் உன்ஹல்கர்  10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.