ஆப்கன் அணி வங்கதேசத்து அணியை மூன்றாவது முறையாக தோல்வியடைய செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. கிரிக்கெட் வழக்கில் சொல்லவேண்டும் என்று சொன்னால் ஆப்கன் அணி வங்கதேச அணியை ஒய்ட் வாஷ் செய்துள்ளது என்றே கூறலாம்.
முதலில் பேட் செய்த ஆப்கன் அணி இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஆப்கன் அணியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக சாமியுல்லா சென்வாரி 28 பந்துகளில் 33 ரன்கள் பெற்றார். பந்து வீசிய வங்கதேச அணியில் அபு ஜேவத் நான்கு ஓவர்கள் போட்டு 27 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை பெற்றார். அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வங்கதேச அணி நிதானமாக விளையாடி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருக்கும்போது சூழல்பந்தின் மன்னனாக உருவாகி வரும் ரஷீத் கான் பந்து வீசினார். இருபது ஓவர் முடிவில் 144 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால் இந்த தொடரின் மூன்றாவது போட்டியிலும் வங்கதேசம் மண்ணை கவ்வியது. இந்த தொடரின் நாயகனாக ரஹீத் கான் விருது பெற்றார்.