

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் எஸ். குமார் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி முன்னிலை வகித்தார். நிகழ்வுகளை மாணவிகள் பூமித்ரா, தனுஸ்ரீ தொகுத்து வழங்கினர். மாணவி பவதாரணி வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பல்வேறு கலை சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளுடன் சான்றிதழ்களைப் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் வழங்கினார். அப்போது அவர் மாணவ மாணவிகளிடம் பேசுகையில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும் முக்கியத்துவம் நேருவின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மாணவர்களிடையே எடுத்துக் கூறினார். விழா ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் அறிவழகன், ரூபி கிரேஸ் போனிக்கலா, மழலையர் பள்ளியின் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், மற்றும் ஆசிரியை கீதா ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் மாணவர் அஸ்வின் நன்றி கூறினார்.