Skip to main content

இந்தியாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆப்பிரிக்க நாடு!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டபோது, மூன்றாம் கட்ட சோதனை முடிவதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது.

 

இருப்பினும் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியப் பிரதமர் மோடியும் கடந்த ஒன்றாம் தேதி, கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், பாரத் பயோ-டெக் நிறுவனமும், மூன்றாம் கட்ட ஆய்வகப் பரிசோதனையில், கோவாக்சின் தடுப்பூசி, 81 சதவீதம் செயல்திறன் கொண்டது எனத் தெரியவந்திருப்பதாக அறிவித்தது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜிம்பாப்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்தநாட்டிற்கு, இந்தியா விரைவில் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்பும் எனத் தெரிகிறது. கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க நாடு ஜிம்பாப்வே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்