இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் துபாயில் வங்கி ஒன்று நடத்திய போட்டியில் பங்கெடுத்து வெற்றிபெற்று கனடாவில் உள்ள ஒரு தனித் தீவை பரிசாக வென்றுள்ளார்.
துபாயில் குடும்பத்துடன் வசித்துவரும் இவர், புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பணியாற்றிய நிறுவனம் மூடப்பட்டதால் அவர் வேலையிழந்தார். அதன்பின் பகுதி நேரமாக பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். துபாயில் சிறிய வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த இவர், லைஃப்ஸ்டைல் வங்கி நடத்திய போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். லிவ்பேங்க் என்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வங்கி, தங்களது சேவைகளை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து நடத்திய இந்த போட்டியில் இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் பணமும், கனடா அருகே 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மலைகள், கடற்கரைகள் நிறைந்த இந்த தீவினை சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மாற்றியமைக்க போவதாகவும், மேலும் இந்தியர்களின் ஆடம்பர திருமணங்களை நடத்தும் ஒரு இடமாக மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.