அண்மையில் அயர்லாந்தில் வயாகரா கலந்த நீரை குடித்த ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயர்லாந்தின் தெற்கு பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் தங்களது செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதைக் கண்டு குழம்பம் அடைந்தாகவும், இதனால் அனைத்து ஆடுகளும் பாலியல் வெறி பிடித்ததுபோல் நடந்துகொள்வதாக ஆடு மேய்ப்பவர்கள் தெரிவித்ததாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்ட்டதுபோது சோதனையில் ஆடுகள் குடித்த நீரில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனமானது கேளிக்கை செய்திகளை வெளியிடும் நிறுவனம் என்றும், அப்படி அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கேளிக்கை செய்தி சமூக வலைதளங்கள் மூலமாக பரவி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.