
வங்கதேச எதிர்க்கட்சி அந்நாட்டின் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக மாபெரும் பேரணி நடத்தியது.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமிலீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி பிரதமர் பதவி விலகி இடைக்கால பிரதமரை நியமித்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும் இந்த போராட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி, எரிபொருள் விலை போன்றவற்றை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கடந்த புதன்கிழமை அன்று நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் திரண்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்குகளை திருடும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியினால் தாகா நகரமே முடங்கியது. பாதுகாப்பிற்காக 20 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.