அமெரிக்காவில் 6 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருபவர் ஜெர்சி லாரான்ஸ். பள்ளியில் ஆசிரியர்கள் அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் அவர்களிடம் சற்று கடுமையாக நடத்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதனால் அடிக்கடி அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து அவளை கண்டிப்பதாக கூறி கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்வார்கள்.
இந்நிலையில், நேற்று இதே மாதிரியாக பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்க, இதனால் கோபமான அந்த சிறுமி, அவர்கள் மீது புத்தகத்தை தூக்கி எறிந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் கோபமான ஆசிரியர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.