Skip to main content

பாகிஸ்தானின் புதிய திட்டம்... விண்வெளியில் இந்தியாவுடன் போட்டியிட புதிய முடிவு..

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உலக அளவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழ்ந்து வருகிறது.

 

pakistan plans to send humans to space

 

 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த படியாக, இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டில் ஆள் இல்லாமலும், 2021-ம் ஆண்டில் விண்ணுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் இந்தியாவின் இந்த முயற்சிக்கு போட்டியாக பாகிஸ்தானும் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தானின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன், " சீனாவின் உதவியுடன் விண்ணுக்கு மனிதனை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும். சீனாவுடன் இணைந்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 வீரர்களைத் தேர்வு செய்து, பின்னர் 2022-ம் ஆண்டில் அதிலிருந்து 25 வீரர்களை மட்டும் தேர்ந்தெடுப்போம். பின்னர் அதில் ஒருவரைத் தேர்வு செய்து விண்வெளிக்கு அனுப்புவோம் இந்த திட்டத்தில் பாகிஸ்தான் விமானப்படை முக்கியப் பங்காற்றும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்