Published on 03/02/2021 | Edited on 03/02/2021

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றை ஒழிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள், அமெரிக்காவில் பைசர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் எனப் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தநிலையில் நியூசிலாந்து நாடு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது.
கரோனா பரவலை, தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்த நாடான நியூசிலாந்தில் தற்போதுதான் முதன்முதலாக தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.