கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் 250 மில்லியன் அமெரிக்க டாலரை ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹுண்டாய் மற்றும் ஓலா ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடந்துவருவதாகம் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த முதலீடு இன்னும் சில வாரங்களில் நிறைவடையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முதலீடு உறுதியாகி ஹுண்டாய் நிறுவனம் ஓலா டாக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓலா நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4% பங்குகள் ஹுண்டாய் நிறுவனத்தின்வசம் வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஓலா டாக்ஸி நிறுவனத்தில் ரூ. 650 கோடியை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் முதலீடு செய்திருந்தார். இவர் செய்த இந்த முதலீடுதான் இதுவரை ஓலா நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளிலே அதிகத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.