பூமியின் தென்பகுதியிலும் வட பகுதியிலும் பனியாய் உறைந்து கிடக்கிறது. இதில் வடபகுதியான ஆர்க்டிக் கடல்நீர் உறைந்ததால் பனிக்கட்டியாகி கிடக்கிறது. தென்பகுதியான அண்டார்டிகாவோ பனியால் உறைந்தாலும் அது ஒரு கண்டம் என்றது அறிவியல். அண்டார்டிகாவை ஆய்வு செய்யும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அண்டார்டிகாவில் உறைந்துள்ள பனி முழுக்க உருகினால் கடல்நீர் மட்டம் 200 அடி உயரும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். ஆனால் அது இப்போது சாத்தியமில்லை.
இந்நிலையில்தான், மேலிருந்து பார்த்தால் சமதளமாக தெரியும் அண்டார்டிகா பனிக்கண்டத்தின் அடிப்பகுதியில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் கொண்ட நிலப்பரப்பு இருப்பதை நாஸாவின் பெட் மெஷின் அண்டார்டிகா புதிய மேப்பாக வரைந்துள்ளது. அண்டார்டிக்காவுக்கு அடியில் மறைந்துள்ள அம்சங்கள் குறித்த விரிவான மேப்பாக இது இருக்கிறது. உறைபனிக்கு அடியில் மிக மிக ஆழத்தில் உயர்ந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் இருப்பதை இந்த அண்டார்டிகா மெஷின் துல்லியமாக கணித்து வரைபடமாக தயாரித்துள்ளது.