நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாகவும், 20 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தும் தீவிரவாதி தனது உடலில் உள்ள கேமரா மூலம் தாக்குதலை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பும் செய்து வருகின்றான்.
இப்படி தாக்குதல் நடத்தி அதனை நேரலையில் ஒளிபரப்பியது உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் வெடிபொருட்களுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் கண்டறியப்பட்டுள்ளன.