Skip to main content

அரசை விமர்சித்த உலக கோடீஸ்வரர் மாயம்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

jackma

 

அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, கடந்த வருடம் ஒரு மாநாட்டில் சீன அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாக அலிபாபா நிறுவனம் செய்த முதலீடுகள் குறித்து விசாரணையில் இறங்கியது.

 

இந்த நிலையில் ஜாக் மா, காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜாக் மா தனது சொந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்காததை தொடர்ந்து, அவர் காணாமல் போய்விட்டதாக வந்த தகவல்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோபிசெட்டிபாளையத்தில் 9 வகுப்பு மாணவர் மாயம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

 9th student missing  at Gobichettipalayam

 

கோபிசெட்டிபாளையத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற 9-ம் வகுப்பு மாணவர் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரபா தேவி. இவர்களுக்கு மகன் சஞ்சய் குமார் (15) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் குமார் கோபி நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்று இரவில் தான் வீட்டுக்கு வருவார்கள்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சஞ்சய் குமாரும் அவரது தங்கை மட்டும் இருந்தனர். பின்னர் மதியம் சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் சஞ்சய் குமாரை அவரது பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சஞ்சய் குமார் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

 

இதனையடுத்து நேற்று கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனை மீட்டுத் தரக்கோரி சஞ்சய் குமாரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான அன்று சஞ்சய் குமார் வெள்ளையில் பிரவுன் கலர் கோடு போட்ட டீ சர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

 

 

Next Story

குஜராத்தில் மாயமான பெண்கள்; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர அறிக்கை

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

gujarat state missing women recent released data national records bureau ncrb

 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் மாயமானது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது 1986 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பானது குற்றம் சார்ந்த புள்ளிவிவரங்கள் மற்றும் அறிக்கைகளை தேசிய மற்றும் மாநில அளவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வெளியான அந்த அறிக்கையில், "2016 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 712 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 246 பெண்களும், 2019 ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 268 பெண்களும், 2020 ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 290 பெண்களும் என மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.