உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ முகாமை பொறுப்பு தலைமை நீதிபதி இன்று தொடங்கி வைத்தார்.
உலக இதய தினம் வரும் செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருதய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமை பில்ரோத் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் பார் அசோசியசன் தலைவர் பாஸ்கர், செயலாளர் திருவேங்கடம் மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இந்த மருத்துவ முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், இதய பாதிப்புகள் தடுக்கவும், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியறிவும் இந்த முகாம் உதவும் எனவும் இந்த மருத்துவ முகாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நாட்கள் முகாம் நடத்தப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இருதய நோய் கண்டறியும் இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அம்சமாக ஒரு குடும்பத்தில் இருவர் பயணடையும் வகையில் பரிசோதனைக்கான அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டையை பயன்படுத்தி இதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.