Skip to main content

தேனியில் வாக்கு எண்ணிக்கை மந்தம்; போலீசுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Voting in Theni is sluggish

தேனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது தேனி அருகே உள்ள கம்பவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ரவுண்டில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் பத்தாயிரம் ஓட்டுவித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி அறிவிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தார். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி,பெரியகுளம், கம்பம், போடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் கல்லூரியில் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணப்பட்டு வந்தது. இப்படி எண்ணப்பட்டு வருவதில் ஆளுங்கட்சியான தங்கத்தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு சுற்றிலும் தங்கத்தமிழ்ச்செல்வனும் டிடிவியும் மூன்று இலக்கிலேயே வாக்குகள் வாங்கி வந்தனர்.

ஆனால் அதிமுக வேட்பாளருக்கு ஒரு சில தொகுதிகளில் எண்ணக்கூடிய எண்ணிக்கை மையங்களில் மூன்று இலக்குகள் வாங்கினார்களே தவிர மற்ற தொகுதிகளில் எண்ணக் கூடிய மையங்களில் இரண்டு இலக்கில் தான் ஓட்டுக்கள் வாங்கி வருகிறார். இதனால் முதல் இடத்தை ஆளுங்கட்சி வேட்பாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் பிடித்து வருகிறார். இரண்டாவது இடத்தை டிடிவி தினகரன் தக்க வைத்து வருகிறார். மூன்றாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிடித்து வருகிறார். இதைக்கண்டு மனம் நொந்துபோன பூத் எண்ணிக்கைக்கு வந்த அதிமுகவினர் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார்கள். ஆனால் இப்படி ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த தகவல்களை முழுமையாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தனர். 

Voting in Theni is sluggish

ஆனால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று யார் எந்த கட்சி வேட்பாளர் முன்னிலையில்  இருக்கிறார் என்பதையும் அறிவித்து வருகிறார்கள். ஆனால் தேனி  பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்தே மந்தமாக  இருந்தது. அப்படியிருந்தும் 10 மணிக்கு மேலாகியும் கூட பல மாவட்டங்களில்  இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று விபங்கள் பத்திரிக்கை மீடியாக்களுக்கு  தெரியப்படுத்தியும் வருகிறார்கள். ஆனால் இங்கு முதல் சுற்றில் எந்த  வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார் என்பது கூட தேர்தல் அதிகாரிதெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த 50க்கும் மேற்பட்டபத்திரிக்கையாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்க சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிகாரிகள், பத்திரிகையாளர்களை ரூமைவிட்டு நீங்க வெளியே போக கூடாது என்றும் விதிமுறைகளை மீறிசெயல்படுகிறீர்கள் என்று தடுத்தனர். அதற்கு பத்திரிக்கையாளர்கள் நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் விபரம் கேட்கத்தான் செல்கிறோம் என்று கூறிவிட்டுசென்றனர். அப்படியிருந்தும் பத்திரிகையாளர்களை போலீஸ் அதிகாரிகள் தடுத்ததில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உடனிருந்த செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் சிலர் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

Voting in Theni is sluggish

அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் பத்திரிக்கையாளர்கள் முறையிட்டனர். அதன் அடிப்படையில் இனிமேல் உடனுக்குடன் ஓட்டு எண்ணிக்கை விபரங்கள் கொடுக்கப்படும் என்று கூறினார்.அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூமிற்கு சென்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்