Published on 22/09/2021 | Edited on 22/09/2021
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்திவருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறையாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வகையில் இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு, கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கௌரி வழங்கினார்.