கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட வண்டலூர் பூங்காவில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. சில நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 3 ஆம் தேதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று உயிரிழந்ததாக நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. உயிரிழந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே கரடி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.