Skip to main content

சசிகலாவை வரவேற்க பேனர் வைக்க அனுமதி வேண்டும் – அமமுக மனு?

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

 Permission is required to place a banner to welcome Sasikala - Ammk petition

 

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா, 4 ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27- ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன் சில ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களுரூவில் இருந்து சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் அமமுகவின் மா.செவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலசுப்ரமணி தரப்பில் இருந்து, ஆம்பூர் காவல்நிலையத்தில் அமமுக சார்பில் இன்று ஒரு மனு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவை வரவேற்க பேனர்கள் வைக்க அனுமதி வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவை வாங்கிய போலீஸார் இதுக்குறித்து எஸ்.பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறை தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உளவுத்துறை மூலமாக இது முதல்வர் எடப்பாடி கவனத்துக்கும் சென்றுள்ளது. சசிகலாவால் முதல்வரான எடப்பாடி அனுமதி தருவாரா? தரமாட்டாரா என கேள்வி எழும்பியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘சசிகலாவை நீக்கியது செல்லும்’ - ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

O.P.S. side argument says Sasikala's removal will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (02-11-23) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (03-11-23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“எங்கள் கட்சி ஒரு குடும்பம் போல் இருக்கிறது” -  சசிகலா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Sasikala says Our party is like a family

 

பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்னையில் இருந்து வி.கே. சசிகலா நேற்று (29-10-23) மதுரை வந்தார். 

 

இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பசும்பொன்னுக்கு வராத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மட்டுமே வருகை தந்துள்ளார். இது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் நேரத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

 

யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டியது. எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அவர்களது ஆசையை கூறுவது எந்த தவறும் இல்லை. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தை போல் தான். அதனால், ஓ.பி.எஸ் விருந்தாளி இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பாக நான் தொடர்ந்த சிவில் வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. இந்த விபரத்தை தான் அவர்கள் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்” என்று கூறினார். 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்